• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மனித உரிமை ஆணையகத்தின் தலைவருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை

ஜெனீவாவில்,மனித உரிமை ஆணையகத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவர் ரோரி முங்கோவனை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மனித உரிமை ஆணையகத்தின் தலைமை காரியாலயத்தில் சந்தித்து, கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன் போது,பெருந்தோட்ட சமூகத்திற்கான காணி உரிமை மற்றும் அவர்களின் சம்பள உயர்வு பிரச்சினை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இப்பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாக ரோரி முங்கோவன் செந்தில் தொண்டமானிடம் உறுதி அளித்தார்.
 

Leave a Reply