• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறினார் ரணில்

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

சுமார் ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.

நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக, முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply