• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரை - போராட்டம் நிறைவு

இலங்கை

சட்டவிரோத யாழ். தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரையை அகற்ற கோரி நேற்று (09) மாலை ஆரம்பமான போராட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.

இன்றைய தினம்(10) போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும் போராட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, இன்றையதினம் தையிட்டி விகாரைக்கு வழிபாட்டுக்காக அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழமைபோன்றே பக்தர்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply