மலையக மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு
இலங்கை
பேராதனைக்கும் கண்டிக்கும் இடையிலான தண்டவாளங்கள் மூழ்கியுள்ளதால் மலையகப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கண்டி நீதிமன்றத்தின் முன்பாகவுள்ள ரயில் மார்க்கத்தில் திடீரென ஏற்பட்ட பாரிய குழியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கண்டிக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் ரயில் சேவைகள் இன்று தாமதமாகும் என்று ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
























