அமைச்சர் சுனில் ஹந்து நெத்தி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்
இலங்கை
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இன்று பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரனின் ஒழுங்கமைப்பில் அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சுனில் ஹந்து நெத்தி தலைமையில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபையின் உயர் அதிகாரிகள் அரச திணைக்களங்களின் தலைவர்கள் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் கல்வி ,சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சட்டவிரோத மண்அகழ்வு, காட்டு யானை தாக்கம், டெங்கு நோயின் தாக்கம், அரசாங்கத்தின் சத்துணவு திட்டம், வீடமைப்பு திட்டங்கள், போக்குவரத்து, போதைப் பொருள் பாவனை, போன்ற விடயங்கள் ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் இங்கு எடுக்கப்பட்டது.
முன்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக அருண் ஹேமச்சந்திர இருந்துவந்த நிலையில் அவரின் அமைச்சின் வேலைப்பளு காரணமாக மாவட்டத்திற்கு புதிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக அமைச்சர் ஹந்துனெத்தி நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது






















