வெல்லம்பிட்டியில் பல வாகனங்கள் மோதி விபத்து
இலங்கை
அவிசாவளை – கொழும்பு வீதியின் வெல்லம்பிட்டி பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேருந்துகளும், மூன்று லொறிகளும் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
























