விமான படிக்கட்டில் தடுமாறிய டிரம்ப்
அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி டிரம்ப் புறப்பட்டார். இதற்காக நியூ ஜெர்சி விமான நிலையத்தில் இருந்து தனது அதிகாரப்பூர்வமான ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் பயணம் செய்தார். முன்னதாக விமானத்தின் படிக்கட்டில் ஏறியபோது அவருக்கு திடீரென தடுமாற்றம் ஏற்பட்டது.
இதனை சுதாரித்துக் கொண்ட டிரம்ப் சட்டென கையை ஊன்றி பின்னர் நடந்து சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் இதேபோல் அடிக்கடி தடுமாறியபோது டிரம்பின் ஆதரவாளர்கள் அவரை கேலி செய்து விமர்சித்தனர்.
இந்தநிலையில் டிரம்ப் தற்போது விமான படிக்கட்டில் தடுமாறியதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.























