• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சம்சுங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர முக்கிய சந்திப்பு

இலங்கை

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ( Jongsam Kim) தென்கொரியாவின் தலைநகரான  சியோலில் உள்ள இலங்கை தூரகத்தில்,  சம்சுங் ஹெவி இண்டஸ்ட்ரீஸின் (Samsung Heavy Industries) உலகளாவிய மனிதவள மேலாண்மை மேலாளர் ஜோங்சாம் கிம்மை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ”தென்கொரியாவின் முன்னணி தொழில் மற்றும் பொறியியல் நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து திறமையான தொழிலாளர்களை வரவேற்கும் துறைகளில் முக்கிய பங்காற்றுவதாகத்” தெரிவித்தார்.

அத்துடன் திறமையான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தாம் இருவரும் கலந்துரையாடியதாகவும்,இதனை சீரான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்த தமது அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்சுங் போன்ற கொரியாவின் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து,பயன்  தரும் மற்றும் இருபுற நலன்கள் வாய்ந்த உறவுகளைக் கட்டியெழுப்ப தாம் விரும்புவதாகவும், அந்த ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply