• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பினால் பொதுமக்கள் அவதி

இலங்கை

வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

அரச கால்நடை வைத்தியர்களுக்காக தனியான பணி யாப்பு உருவாக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என குற்றம் சுமத்தியுள்ளதுடன், குறித்த யாப்பினை நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கால்நடை வைத்தியர்கள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா அரச கால்நடை வைத்திய அலுவலகங்களிலும் கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் கால்நடைகளிற்கான மருத்துவ தேவைக்காக வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
 

Leave a Reply