போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
இலங்கை
மாவத்தகம – கைத்தொழில் பேட்டை சந்தி பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
மாவத்தகம – கைத்தொழில் பேட்டை சந்தி பிரதேசத்தில் மாவத்தகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் வாரியபொல, யடிகந்துருவ பிரதேசத்தில் போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த பெண் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ஈதனவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும், இபலவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் சந்தேகநபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 9,657 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.























