• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாத்தறை மித்தெனிய மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை மித்தெனிய வீதியின் ஹொரொன்தூவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹக்மன பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்  எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

யடியன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஹகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply