ஆர்யாவின் அடுத்த படத்தின் கதை - லூசிஃபர் கதையாசிரியர் செய்யும் சம்பவம்
சினிமா
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை தயாரித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும்மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.
இந்த படங்களை தொடர்ந்து ரன் பேபி ரன் என்ற படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஆர்யாவிற்கு 36-வது திரைப்படமாகும்.
இப்படத்திற்கு மோகன்லாலின் எம்புரான் படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய முரளி கோபி கதை எழுதியுள்ளார். மினி ஸ்டுடியோ வினோத்குமார் தயாரிக்க, அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.























