சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விளக்கம்
இலங்கை
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (08) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
இதேவேளை, குறித்த கொள்கலன்களில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்கிடமான எதுவும் கொண்டு வரப்படவில்லை என ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
அந்தக் கொள்கலன்களை விடுவிப்பதற்கு முன்னர், இறக்குமதி ஆவணங்களில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்து, இந்தக் கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சுங்கத் திணைக்களம் பின்பற்றிய நடைமுறைகளால், குறித்த கொள்கலன்களில் எந்தவொரு சட்டவிரோதப் பொருட்களும் இல்லை என தாங்கள் நம்புவதாகவும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.






















