• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெர்மனி, இஸ்ரேல் இடையே நேரடி விமான சேவை - லூப்தான்சா

இஸ்ரேல்-காசா போரில் காசாவுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதலும் நடத்துகின்றனர். எனவே ஏமன், லெபனானுக்கு எதிராகவும் இஸ்ரேல் போரை அறிவித்தது.

இதற்கிடையே, கடந்த மாதம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் அங்குள்ள வாகன நிறுத்துமிடம் தீப்பிடித்து 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி ஜெர்மனி-டெல் அவிவ் இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வரும் 23-ம் தேதி முதல் டெல் அவிவ் நகருக்கு விமான சேவையை தொடங்க உள்ளதாக ஜெர்மனியின் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
 

Leave a Reply