BENZ படத்தை குறித்து சுவாரசிய அப்டேட் கொடுத்த பாக்கியராஜ் கண்ணன்
சினிமா
லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.
படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தில் நடிகர் மாதவன் , நிவின் பாலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.
இந்நிலையில் படத்தின் வில்லன் கதாப்பாத்திரமான ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார். பென்ஸ் படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் படத்தை குறித்து சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் அதில் அவர் " லோகேஷ் கனகராஜ்-உம் நானும் நண்பர்கள். லோகேஷ் அவரது சினிமாடிக் யூவிவர்சில் மற்ற இயக்குநர்களும் திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஐடியா இருந்தது. பென்ஸ் திரைப்படம் மற்ற LCU திரைப்படங்களின் சமக்காலத்தில் நடக்கும் கதையாகும்.இப்படத்தின் அடிப்படை கதை லோகேஷ் உடையது அதிலிருந்து நான் டெவலப் செய்தேன்.' என கூறினார்.






















