மம்பட்டியான் பாடல் விவகாரம் - டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவுக்கு பணம் கொடுக்கலாம் - தியாகராஜன்
சினிமா
சசிகுமார் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே, வருத்தத்தில் உள்ள சகோதரனை சந்தோஷப்படுத்த சசிகுமாரின் இளைய மகனாக நடித்துள்ள சிறுவன் 'மம்பட்டியான்' பாடலுக்கு நடனம் ஆடும் காட்சி டூரிஸ்ட் பேமிலி படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி அனைவராலும் ரசிக்கப்பட்டதை அடுத்து 'மம்பட்டியான்' பாடலும் டிரெண்டிங் ஆனது.
இந்த நிலையில், தான் இயக்கிய படத்தின் பாடல் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தில் இடம்பெற்றுள்ளது குறித்து இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் கூறுகையில், 'மம்பட்டியான்' பட பாடலை பயன்படுத்தியதற்கு அனுமதி பெறவில்லை என பலரும் என்னிடம் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படக்குழு மீது வழக்கு தொடரக்கூறினார்கள். பணம் கேட்கச் சொன்னார்கள்.
ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. அந்தப் பாடல் மறுபடியும் ஹிட் ஆனதற்கு நான் தான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றார்.
























