ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக மற்றும் நடவடிக்கையின் இறுதிக்கட்டம்
இலங்கை
இலங்கை ஐயப்ப பக்தர்களின் இந்தியா நோக்கிய யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் ஓரளவு நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஆனந்த குமாரின் வேண்டுகோளுக்கிணங்க யாத்திரை மேற்கொள்ளும் சுவாமி மார்கள் உடனான விசேட கலந்துரையாடல் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் (04) இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது யாத்திரையினை இந்து சமய கலாச்சார அலுவலர்கள் திணைக்களத்தின் நேரடி வழிகாட்டல் மூலம் அவர்களுடைய முழுமையான கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுவாமிமார்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகள் சம்பந்தமாகவும் விசா தொடர்பான கட்டண பிரச்சினைகள், விமான டிக்கட்டுகள் மற்றும் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாட ப்பட்டதுடன் அடுத்த கட்டமாக புத்த சாசன சமய மற்றும் கலாச்சார அலுவலர்கள் அமைச்சர், இந்து சமய கலாச்சார அலுவலர்கள் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
























