ரஷ்யாவை தொடர்ந்தும் ஆதரிப்பதாக கிம் தெரிவிப்பு
உக்ரைன் - ரஷ்யா தாக்குதலில் ரஷ்யாவை தொடர்ந்தும் ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜான் உன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் இருந்து வட கொரியா ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது.
அதேவேளை உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான தாக்குதலில் வட கொரியா இராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ரஷ்யாவின் போர் முயற்சியை ஆதரிக்க வட கொரியா ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதாகவும் தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.























