• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிரம்ப் நன்றி கெட்டவர்- எலான் மஸ்க்

அமெரிக்காவில் வரிக்குறைப்பை அமல்படுத்தும் புதிய மசோதா தொடர்பாக அதிபர் டிரம்ப்- தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. எலாக் மஸ்க் தற்போது கூறியருப்பதாவது:-

எம்.பி.க்கள் மசோதாவை படித்துவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நான் உதவியிருக்காவிட்டால் அதிபர் தேர்தலில் தோற்றிருப்பார். டிரம்ப் நன்றி கெட்டவர். சிறார் பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டிரம்பின் பெயர் இருப்பதாலேயே அவர் அதனை வெளியிடவில்லை. நாசா உடனான டிராகன் விண்கலன் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார். இதனால் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார். இதன்பின், டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விரைவில் விலகுவதாக மஸ்க் அறிவித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே பிரிவு உண்டானதை அடுத்து அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்ட வேண்டும் என்று மஸ்க் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Leave a Reply