• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை

இலங்கை

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இத் தீர்ப்பினை  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க வழங்கியுள்ளார். இதேவேளை குறித்த  சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு,  அபராதம் செலுத்தப்படாவிட்டால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply