நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவிக்காலம் நீட்டிப்பு- நடிகர் விஷால் பதில் மனு
சினிமா
நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவி நீடிப்பு மற்றும் தேர்தல் நடத்தக்கோரி நடிகர் நம்பிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் நடிகர் விஷால் பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் " சங்க கட்டிட பணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது; பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதில் எவ்வித விதிமீறலும் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






















