• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செம்மணி மனித புதைகுழி- ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு

இலங்கை

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி நேற்றைய  தினம் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.இதனையடுத்து அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக , மண்டையோடு ஒன்றும், கை எலும்பு ஒன்றும் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில் , நேற்று முன் தினம்  இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது, ஐந்து மண்டையோடுகளுடன் ,  எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த எச்சங்கள்  தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவை , அவசர அவசரமாக புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகளுடன் கூடிய , எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட மனித எலும்பு கூட்டு தொகுதியில் ஒரு எலும்பு கூட்டு தொகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply