நம்மை நாமே வாழ்த்திக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு?
சினிமா
ஜனவரி பதினேழு... அவரோட பிறந்த தினம்... 'நம்ம பிறந்த தினத்தை நினைவுவெச்சு மத்தவங்கதான் கொண்டாடணுமே தவிர, நம்மை நாமே வாழ்த்திக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு?’னு சொல்லுவார். ஆனாலும் அன்னிக்கு சாப்பாட்டுல அவருக்குப் பிடிச்ச சேமியா பால்பாயசம் வெச்சுக் கொடுப்பேன்''- கலங்கிய கண்களுடன் சொன்னார் ஜானகி ராமச்சந்திரன்.
எம்.ஜி.ஆர். மறைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் வாழ்ந்த ராமாவரத்துக்குச் சென்றிருந்தோம். சென்னைப் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ராமாவரத்தில், சுமார் ஏழரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர். தோட்டம். ''அவர் (எம்.ஜி.ஆர்.) கோடி கோடியாகச் சம்பாதித்தார் என்று என் காதுபடவே சிலர் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் அவர் எவ்வளவு சம்பாதிச்சார்னோ, எதுக்காகச் செலவழிச்சார்னோ, எனக்கு மட்டுமில்லே... அவருக்கே தெரியாது.
அப்பப்போ யாராவது என்கிட்ட, 'அம்மா! ஐயா புண்ணியத்துல என் மக கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது’, 'ஐயா மட்டும் கைகொடுத்திருக்கலேன்னா, நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்’னு சொல்றதைக் கேட்ட பிறகுதான் விஷயம் புரிஞ்சுப்பேன்'' என்று குறிப்பிட்ட ஜானகி அம்மாள், இப்போது யாரையும் எதற்காகவும் சந்திப்பது இல்லை.
நம்மிடம் ''யாருகிட்ட என்ன பேசினாலும் அரசியலாக்கிடுவாங்களோனு பயமா இருக்கு. எனக்கு இனி அரசியல் தேவை இல்லை. என்னோட கடைசி நாள் வரைக்கும் அவரோட நினைவுகளுடன் அவர் வாழ்ந்த இந்த வீட்டுக்குள்ளேயே இருக்கணும்... அவ்வளவுதான்!''
சில நிமிடங்களுக்குப் பிறகு, அவரே தொடர்கிறார்... ''எனக்கு என்னமோ... அவர் ஒரு மாபெரும் அவதாரம்னு தோணும். தோட்டத்துக்கு வெளியேதான் அவர் புரட்சித் தலைவர். வீட்ல அவர் ஒரு குடும்பத் தலைவர் மட்டும்தான். ஜோக் சொல்லிச் சிரிக்கிறதும், நண்பர்களோட கடிதங்களைப் படிச்சு சந்தோஷப்பட்டுப் பேசுற தும், தன்னோட அம்மா பட்ட கஷ்டங்களை அடிக்கடி சொல்லிக் கண் கலங்கறதுமா இருப் பார். ஆனா, ஒரு பிரச்னைனு வந்துட்டா, இரும்பு மாதிரி நிப்பார் "
- 17 - 1 - 1993 ஆனந்த விகடன் இதழில் ஜானகி எம்.ஜி.ஆர் . பேட்டியிலிருந்து .






















