நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது - கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவருக்கு கமல் கடிதம்
சினிமா
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்ற சொல்லியதற்காக கன்னட அரசியல் அமைப்பினர் கமல்ஹாசனை புறக்கணித்து தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடகூடாது என போராடி வருகின்றனர். அதேப் போல் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் 2.30 மணிவரை கெடு விடுத்துள்ளது.
கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததற்கு என்ன ஆதாரம்? கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கூற நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா? கன்னடம் குறித்த கமல்ஹாசன் பேச்சால் தற்பொழுது பதற்றம் உருவாகியுள்ளது ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன? என கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கமல்ஹாசன் தற்பொழுது கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவருக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் " கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நாம் அனைவரும் ஒன்று, ஒரே குடும்பம் என்பதைதான் என் கருத்தின் மூலம் வெளிப்படுத்த நினைத்தேனே தவிர, கன்னட மொழியையோ, மக்களையோ இழிவு படுத்தும் நோக்கத்தில் அல்ல..." என விளக்கம் அளித்து கடிதம் எழுதியுள்ளார்.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கூடாது என நா.த.க தலைவர் சீமான் அன்பு கட்டளை வைத்துள்ளார். கமலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.






















