• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போதைப்பொருள் கடத்தல்காரர் சான் சுத்தா தப்பியோட்டம்

இலங்கை

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ‘சான் சுத்தா’ என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர், சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.

வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று கடந்த மே 30 அன்று வெல்லவாய நகருக்கு அருகில் ஒரு சிறப்பு சோதனையை நடத்திய போது சான் சுத்தா கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கூர்மையான ஆயுதங்களால் பொலிஸாரை தாக்கியுள்ளார்.

இதன்போது, அதிகாரிகள் அவரது முழங்காலுக்கு கீழ் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர்.

இதனால், காயமடைந்த சந்தேக நபர் முதலில் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சந்தேக நபர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறை அதிகாரிகளின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (03) காலை தப்பிச் சென்றுள்ளார்.

தப்பியோடிய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply