ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு... லால் சலாம் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் தோல்வியை தழுவியது.
இதனையடுத்து இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ஹார்ட் டிஸ்க் தொலைந்து போனதாக அப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 1 வருடத்திற்கு பிறகு இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 6ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் லால் சலாம் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.






















