நைஜீரியாவில் மார்க்கெட் நகரை மூழ்கடித்த மழை வெள்ளம் - 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
நைஜீரியா நாட்டின் மார்க்கெட் நகரான மோக்வா, மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால், நகருக்குள் வெள்ளம் புகுந்து நிலைமையை மேலும் மோசமாக்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று பலமணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் மோக்வா நகர் வெள்ளத்தில் தத்தளித்த நேரத்தில், அணை உடைந்து தண்ணீர் நகருக்குள் புகுந்ததால் உயிரிழப்பு அதிகமாகியுள்ளது. கனமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.























