• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜான்வி கபூர் நடித்த பரம் சுந்தரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா

மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரிக்கும் ரொமான்ஸ் படமான பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்குகிறார். மல்ஹோத்ரா பரம் கேரக்டரிலும், ஜான்வி கபூர் சுந்தரி கேரக்டரிலும் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் வட இந்திய இளைஞனாக சித்தார்த் மல்ஹோத்ராவும் தென்னிந்திய பெண்ணாக ஜான்வி கபூர் இடம் பெற்றுள்ளார். இப்படம் சிரிப்பு, காதல், பிரச்சனை மற்றும் எதிர்ப்பார்க்காத டிவிஸ்டுகளுடன் திரைக்கதை அமைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

Leave a Reply