• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கஜமுத்துடன் இருவர் கைது

இலங்கை

விற்பனை செய்யவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 170 கிராம் கஜமுத்துவை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கொம்பனி வீதி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் நேற்று (28) பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாள் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply