வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தம்
இலங்கை
மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பிரதான ரயில் மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் ஒரு மாதம் நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பிரதான ரயில் பாதையில் ஐந்து பாலங்களில் புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலங்களை அகற்றிவிட்டு, புதிய பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.
மேலும், ஐந்து பாலங்களும் இந்திய கடன் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 9127 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பரில் ரயில் போக்குவரத்துக்காக இந்தப் பாதை திறக்கப்பட்ட போதிலும், சமிக்ஞை அமைப்பின் க தாமதமாகி வருவதாகவும், சமிக்ஞை இல்லாததால், தற்போது அந்தப் பகுதியில் டோக்கன் அமைப்பில் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.





















