• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்பிய கனடா அஞ்சல் ஊழியர் சங்கம்

கனடா

கனடா அஞ்சல் நிறுவனத்திற்கும் அதன் 55,000 ஊழியர்களைக் கொண்ட கனடிய அஞ்சல் ஊழியர் சங்கம் (CUPW) இடையிலான தொழிலாளர் விவகாரம் மீண்டும் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.

மேலதிக நேர பணியைத் தடை செய்யும் முடிவில் சங்கம் இருந்தாலும், இரு தரப்பும் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை மேசையை நோக்கிச் செல்லத் திட்டமிட்டுள்ளன.

சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் வைத்துள்ள புதிய கோரிக்கைகளுக்கு கனடா அஞ்சல் நிறுவனம் இன்று பதிலளிக்க இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

• சம்பள உயர்வுகள் மற்றும் பிற இழப்பீடுகள்

• பகுதி நேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது

• வார இறுதி நாட்களில் அஞ்சல் விநியோகம் போன்ற விடயங்கள்.

இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை முதலே வேலைநிறுத்தத்திற்கு செல்லும் உரிமையுடன் இருந்தாலும், மக்கள் சேவையை பாதிக்காமல் இருக்க மேலதிக நேர பணியைத் தடை செய்வதாகவே முடிவு செய்தது.

கடந்த வாரம் அவர்களிடம் வந்த பார்சல் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50% குறைந்துள்ளது என்றும், அது தொடர்ந்து வீழ்ச்சிமயமாக இருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply