• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு

இலங்கை

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மன்னார்   மாவட்ட அரசாங்க அதிபர்  க.கனகேஸ்வரன்  அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ்  மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான   உப்பாலி சமரசிங்க  தலைமையில் இன்று  காலை  மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், காதர் மஸ்தான்,  ரவிகரன், முத்து முஹம்மட்,  ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது  புதிதாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும்  கனிய மணல் அகழ்வுச் செயற்பாடிற்கு பல்வேறு தரப்புக்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில் பிரதேச   பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள்,  முப்படை பிரதானிகள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply