பல்கலைக் கழக மாணவ மாணவிகளுக்கு உதவி வழங்கிய கனடா வாழ் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை
இலங்கை
அம்பாறை மாவட்டம்- பெரிய நீலாவணை விஸ்ணு மகா வித்தியாலத்திலிருந்து பல்கலைக் கழகம் புகுந்துள்ள மாணவ மாணவிகளுக்கு உதவி வழங்கிய கனடா வாழ் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை
இலங்கையின் கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம்- பெரிய நீலாவணை விஸ்ணு மகா வித்தியாலத்திலிருந்து பல்கலைக் கழகம் புகுந்துள்ள மாணவிகளைப் பாராட்டும் வைபவம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந்த வைபவத்தில் பெரிய நீலாவணை விஸ்ணு மகா வித்தியாலத்திலிருந்து பல்கலைக் கழகம் புகுந்துள்ள மாணவிகளைப் பாராட்டும்வகையில் அன்பளிப்புக்கள் வழங்கிய கனடா வாழ் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களையும் பாடசாலை அதிபர் திருமதி வாசுகி ஐங்கரன் மற்றும் உப- அதிபர் ஆகியோரையும் பாடசாலைச் சமூகம் வரவேற்றது.
இந்த பாடசாலையில் ஆண்-பெண் இருபாலாரும் கல்வி கற்று வந்தாலும் 12 மாணவிகள் இந்த வருடம் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி வைபவத்தில் கனடா 'உதவும் பொற்கரங்கள்' அமைப்பின் தலைவர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை (விசு) அவர்களும் ஏனைய விருந்தினர்களும் மலர் மாலைகள் அணிவிக்கப்பெற்று ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பெறுவதனை படங்களில் காணலாம்
செய்தியும் படங்களும் சரவணன்- மட்டக்களப்பு






















