வாகரை பகுதியில் மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு
இலங்கை
திருகோணமலை கிண்ணியாவில் இருந்து மட்டக்களப்பு ஓட்டுமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பதுரியா நகர் ஆலையடி, மற்றும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை ஆகிய பகுதிகளை சேர்ந்த 19 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஓட்டுமாவடியைச் சேர்ந்த 6 நண்பர்கள் 3 மோட்டார் சைக்கிள்களில் சம்பவதினமான நேற்று இரவு(25) கிண்ணியாவுக்கு சென்று இங்கிருந்து ஓட்டமாவடி பகுதியை நோக்கி பயணித்தபோது வாகரை பனிச்சங்கேணி பாலத்தில் வேககட்டுப்பாட்டை மீறி பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.























