• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெர்மனியில் துணிகரம் - ஹம்பர்க் ரெயில் நிலைய கத்திக்குத்து தாக்குதலில் 17 பேர் காயம்

ஜெர்மனியின் ஹம்பர்க் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. ரெயிலுக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் 17 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கத்தியால் தாக்கியவரை அங்கிருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தாக்குதல் நடத்தியதன் நோக்கம், அவரது பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Leave a Reply