• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் அமைச்சர்கள் 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி

இலங்கை

ஜனாதிபதி நிதிய மோசடி குற்றச்சாட்டின் பேரில், கெஹெலிய ரம்புக்வெல்ல, ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர ஆகிய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு  அனுமதி வழங்கியுள்ளது.

போலியான தகவல்களை சமர்ப்பித்து ஜனாதிபதி நிதியத்தில் அங்கீகரித்த உயர்ந்தபட்ச தொகையையும் விட கூடுதலான தொகையைப் பெற்று மோசடி செய்துள்ளதாக குறித்த 12 பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இதுகுறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கொழும்பு நீதவான் நீதிமன்றம் அரச வங்கிகளுக்கு கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply