• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனுஷின் அடுத்தடுத்த அதிரடி Line Ups

சினிமா

சேகர் கர்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து அவரே இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது.

இந்நிலையில், தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷின் அடுத்த படத்திற்கு 'கலாம் : மிஸைல் மேன் ஆப் இந்தியா ' என பெயரிடப்பட்டுள்ளது. டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இப்படம் உருவாகிறது

இந்த படத்தை 'ஆதிபுருஷ்' திரைப்படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்க உள்ளார். அப்துல் கலாம் பயோபிக் படம் அவர் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி தனுஷின் லைன் அப் திரைப்படங்களை பார்க்க மிக பிரம்மாண்டமாகவும், வித்தியாசமான கதைக்களங்களுடன் இருக்கிறது. தற்பொழுது அதிக லைன் அப் திரைப்படங்கள் வைத்திருப்பவர் தனுஷ் மட்டுமே.

அவரது லைன் அப்கள் பின் வருமாறு: இளையராஜா சுயசரித திரைப்படம், பார்க்கிங் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார், அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி , மாரி செல்வராஜ் , லப்பர் பந்து புகழ் தமிழரசன், வெற்றிமாறன் இயக்கும் படங்களில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply