• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாமலுக்கு எதிரான வழக்கில் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கை

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொண்டு அதனை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முன்விசாரணை ஆலோசனை கூட்டத்திற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி முன்விசாரணை ஆலோசனை கூட்டத்திற்காக அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு அழைக்கப்பட்டபோது, ​​பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் இன்று (21) ஆஜரானார்.
 

Leave a Reply