• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்

இலங்கை

வவுனியா கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு(19) அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை ஒன்று அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கண்னாட்டி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply