• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருமண தேதியை அறிவித்த நடிகர் விஷால்- சாய் தன்ஷிகா

சினிமா

நடிகை சாய் தன்ஷிகா யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில், நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைப்பெற உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

இந்த தகவலை யோகி டா படத்தின் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் மேடையிலேயே அறிவித்தார்.

பின்னர் பேசிய நடிகை சாய் தன்ஷிகாவும், நடிகர் விஷாலும் அடுத்தடுத்து தங்களது காதல் குறித்த தகவலை உறுதி செய்தனர்.

அப்போது, நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா ஆகியோர், தங்களுக்கு வரும் ஆகஸ்டு 29ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
 

Leave a Reply