• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டூரிஸ்ட் ஃபேமிலி ஒரு அற்புதமான திரைப்படம் - பாராட்டிய இயக்குநர் ராஜமவுலி

சினிமா

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் கடந்த 1-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இன்றும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இப்படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "டூரிஸ்ட் ஃபேமிலி என்ற அற்புதமான திரைப்படத்தை பார்த்தேன். இப்படத்தில் மனதைத் தொடும் காட்சிகளும் எலும்புகளை கூச வைக்கும் நகைச்சுவையும் நிறைந்துள்ளது.. இப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் பார்க்க வைத்தது. அபிஷன் ஜீவின்ந்த் சிறப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த சினிமா அனுவபம் கொடுத்ததற்கு நன்றி. இப்படத்தை திரையரங்குகளில் தவறவிடாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து இயக்குனர் ராஜமவுலிக்கு டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், "இன்னும் என்னால் இதை நம்ப முடியவில்லை. அவருடைய படங்களை நான் வியந்து பார்த்தேன். அந்த உலகங்களை உருவாக்கிய ஒருவர் ஒரு நாள் என் பெயரைப் கூறுவார் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை. ராஜமவுலி சார் நீங்கள் இந்த பையனின் கனவை வாழ்க்கையை விடப் பெரியதாக்கிவிட்டீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
 

Leave a Reply