• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின்னல் தாக்கம், மண்சரிவு குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை

நாடு முழுவதும் கன மழை பெய்துவரும் நிலையில் பல மாகாணங்களில் கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான ‘ஆம்பர்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

Leave a Reply