
சூர்யா - மமிதா பைஜு காம்போ - சூர்யா 46 பட பூஜை விழா தொடக்கம்
சினிமா
ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை தற்காலிகமாக சூர்யா 46 என அழைக்கப்படுகிறது.
இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
சூர்யா 46 திரைப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு ரொமாண்டிக் கமெர்சியல் திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் பூஜைவிழா இன்று நடைப்பெற்றது. படப்பிடிப்பு பணிகள் வரும் மே 30 ஆம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ராதிகா மற்றும் ரவீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.