
மணி ரத்னம் இயக்கும் அடுத்த பட அப்டேட்...
சினிமா
மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.
இதை தொடர்ந்து மணி ரத்னம் அடுத்து இயக்கவுள்ள படத்தை பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நடிகரான நவீன் பிலொஷெட்டி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது.இப்படம் ஒரு ரொமாண்டிக் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
நவின் பொலிஷெட்டி இதற்கு முன் நடித்த சிச்சோரே, ஏஜெண்ட் சார் ஸ்ரீனிவாச ஆத்ரேயா மற்றும் மிஸ் ஷெட்டி பொலிஷெட்ட்ய் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவர இல்லை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.