• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய தோற்றத்தில் களமிறங்கிய தமன்னா... 

சினிமா

நடிகை தமன்னா கருப்பு நிற ட்டிரண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

தென்னிந்திய நடிகைகளுள் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என இன்றளவும் பிஸியான நடிகையாக வலம் வருகின்றார்.

தமிழ் சினிமாவில் ‘கேடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான தமன்னா தழிழில் அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.

ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுவதிலும் கேஜிஎப், ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் தமன்னாவின் நடனம் இடம்பெற்று வருகிறது.

ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து, ஸ்ட்ரீ 2' படத்தில் 'ஆஜ் கி ராத்' என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார்.தற்போது இவரின் நடிப்பை விடவும் நடனத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.

அண்மைகாலமாக சமூக வலைத்தளங்களிலும் அதிக ஈடுபாடு காட்டிவரும் தமன்னா கருப்பு நிற ட்டிரண்டி உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 
 

Leave a Reply