துடரும் இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா & கார்த்தி
சினிமா
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்' படத்தில் நடித்துள்ளார். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும்.
துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்க ரெஞ்சித் தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாகி 1 வாரத்தில் வசூலில் 100 கோடி ரூபாயை தாண்டியது.
இப்படம் திரிஷ்யம் திரைப்படத்தை போல் சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
மலையாள சினிமாவில் இதுவரை அதிகம் வசூலித்த திரைப்படமாக துடரும் உருமாறியுள்ளது. திரைப்படம் இதுவரை உலகளவில் 200 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இந்நிலையில் இயக்குநர் தருண் மூர்த்தியை நேரில் அழைத்து நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி பாராட்டியுள்ளனர். இதனை தருண் மூர்த்தி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். தொடரும் படத்தில் ஷோபனா கதாப்பாத்திரத்திற்கு முதலில் ஜோதிகா நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.






















