• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரயில் நிலைய அதிபர்கள் தொடங்கிய அடையாள வேலைநிறுத்தம் நிறைவு

இலங்கை

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் தொடங்கிய அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.

அதன்படி, இன்று முதல் ரயில் சேவைகள் வழமை போல் நடைபெறும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை செயல்படுத்த ரயில் நிலைய அதிபர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, தினசரி ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், நேற்றும் நேற்று முன்தினம் இரவும் இரவு தபால் ரயில்களின் சேவையும் நிறுத்தப்பட்டது.

எனினும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply