ஜப்பானில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி
சினிமா
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் கடந்த 1-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இன்றும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் படத்தை ஜப்பானில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி அங்கு வெளியாகிறது. ஜப்பானில் தமிழ் திரைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி ஜப்பானிலும் வெற்றியடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.





















