சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் கடந்த 1-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இன்றும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் படத்தை பார்த்த அனிருத் இயக்குநரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். அதனை மிகவும் சந்தோஷத்துடன் இயக்குநர் அபிஷன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பார்த்துவிட்டு சர்ப்ரைஸாக இசையமைப்பாளர் அனிருத் கால் செய்து, தான் பார்த்த சிறந்த திரைப்படங்களுள் இதுவும் ஒன்று எனக் கூறினார். நடிகர்களின் நடிப்பையும், இசையையும், இயக்கத்தையும் திரையரங்கில் கண்டு ரசித்ததாக கூறினார். மிக்க நன்றி அனிருத் சார்! என் மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.