TamilsGuide

தேஷபந்து தென்னக்கோன் விசாரணைக்கு அழைப்பு

தேஷபந்து தென்னக்கோன் பதவியின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் 19 ஆம் திகதி முன்னிலையாகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு தேஷபந்து தென்னக்கோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குழுவின் முதற்கட்ட விசாரணை பணிகள் நிறைவு செய்யப்பட்டு பரிசீலணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவி அதிகாரங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து, அறிக்கையிடுவதற்காக குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment